வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 ஜனவரி, 2012

மீனவர் பிரச்சினைக்கு கலாமின் இரு யோசனைகள்


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாகவும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவும் பேச்சு நடத்தியதாக இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் தெரிவித்தார்.
இதில் குறிப்பாக தனக்கும் இந்திய மீனவர்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதால் - இலங்கை ஜனாதிபதியுடன் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் முக்கியபேச்சு நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். "மீனவர்களோடு நன்கு பழகிய மற்றும் மீன்பிடி தொடர்பில் நுணுக்கங்களை அறிந்து வைத்திருப்பவன் என்ற ரீதியில் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தேன். கடலின் அனைத்து பிரதேசங்களிலும் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவர். மீன்வளம் எங்கிருக்கிறதே அதனைத் தேடி மீனவர்கள் தேடிச் செல்வர். அது இந்தியர்களாக இருக்கட்டும் இலங்கையர்களாக இருக்கட்டும் இல்லையேல் அமெரிக்கர்களாக இருப்பினும் இதனையே செய்வர். ஆகையினால் மீன்பிடி தொடர்பில் இறுக்கமான சட்டங்களை பிரயோகிப்பது சாத்தியமற்ற விடயம். இதனை ஒரு போதும் யாராலும் இலகுவில் தடுக்கவும் முடியாது" எனவும் டாக்டர் அப்துல் கலாம் கூறினார். இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் காலம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார். இச்சந்திப்பின்போது "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னென்ன விடயங்கள் தொடர்பில் உரையாடினீர்கள்?" என்று ஊடகவியலாளரொருவர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இருநாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் தொடர்ந்து குறிப்பிடுகையில்... "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின்போது மீனவர்களின் பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகளை முன்வைத்தேன். அதில் முதலாவது, ஏழு நாட்களில் ஒருநாள் மீன்பிடி நடவடிக்கைக்கு ஒய்வு வழங்கல். ஏனைய ஆறு நாட்களில் மூன்று நாட்கள் இந்திய மீனவர்களும் ஏனைய மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களுக்கும் சாதகமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வழிசெய்தல். இரண்டாவதாக ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையை ஊக்குவிப்பதாகும். இச்செயற்பாட்டில் நவீன வசதிகளைக் கொண்ட கப்பல்களை ஈடுபடுத்தி மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்ளல். குறித்த மீன்களை கப்பலில் வைத்தே பதனிட்டு பொதி செய்து கடல் பிரதேசத்திலேயே மொத்தமாக விற்பனை செய்யமுடியும். இச்செயற்பாடுகள் அனைத்தும் கடல் பிரதேசத்தில் இடம்பெறுவதனால் பல சிக்கல்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். குறிப்பாக வரி செலுத்துகின்ற பிரச்சினையும் குறைந்துவிடும். இந்த இரு யோசனைகளையும் முன்மொழிந்திருக்கிறேன். இந்தப் பிரச்சினைக்கு இனி எவ்வாறு இராஜதந்திர ரீதியில் தீர்வு காண்பது என்பது பற்றி இரு நாட்டின் தலைமைகளும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’