பலஸ்தீனத்தின் மேற்குக்கரையில் உள்ள குவால்கிவ்லியா பகுதியில் தனது சொந்த தந்தையால் 10 வருடங்கள் குளியறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரை அந்நாட்டுப் பொலிஸார் விடுவித்துள்ளனர்.
பாரா மெல்ஹெம் என்ற அச்சிறுமியின் தற்போதைய வயது 21. இவர் 11 வயதாக இருக்கும் போது தனது தந்தையால் வீட்டில் உள்ள குளியறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து சுமார் 10 வருடங்கள் வீட்டின் வெவ்வேறு அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவருக்கு வெறும் பாண் துண்டும், அப்பிளும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் வீட்டைச் சுத்தப்படுத்துவதற்காக அறையை திறந்து விட்டுள்ளார் இவரது தந்தை. இவரது பெற்றோர் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதனையடுத்து தாயார் தனியாக பிரிந்து சென்றுள்ளார்.
பாரா தாயாரிடம் செல்லக்கூடாதென்பதற்காக இவரை அறையில் அடைத்து வைத்துள்ளார் தந்தை.
தங்களுக்குக் கிடைத்த தகவலொன்றின் பேரில் இவரது வீட்டைச் சோதனை செய்த அப்பிரதேச பொலிஸார் பாராவை விடுவித்துள்ளனர்.
தனது அனுபவங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பாரா,
" தந்தை என்னை சிறிய வயதிலேயே வீட்டிலுள்ள அறைகளில் அடைத்து விட்டார். நள்ளிரவு வேளைகளில் மட்டுமே அறையைத் திறந்து விடுவார் எனினும் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்.
வெறும் சொற்ப உணவையே எனக்கு வழங்கி வந்தார். நான் வெளியே செல்ல முயற்சித்தால் என்னை வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கி விடுவதாகவும் எச்சரிப்பார்.
மாதத்திற்கு ஒரு தடவையே என்னைக் குளிக்க அனுமதிப்பதுடன் எனது தலைமுடியையும், கண் புருவங்களையும் சவரம் செய்துவிடுவார்.
எனது சிறிய வானொலிப்பெட்டியில் நிகழ்ச்சிகளையும், பாடல்களையும் கேட்பதிலேயே எனது காலம் சென்றது. என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தைக்காண ஆவலாக இருந்தேன்.
தற்போது எனக்கு எந்தக்கவலைலும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாரா தற்போது தனது தாயாருடன் தங்கியுள்ளார்.
இவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த குளியலறையின் பரப்பளவு வெறும் ஒன்றரை மீற்றர் மட்டுமே.
பாராவின் தந்தை அவரை இரும்பு ஆயுதங்களால் தாக்கியும் உள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரது தந்தை இஸ்ரேலிய குடியுரிமையைக் கொண்டுள்ளதால் என்பதால் அவர் இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரும், அவரின் இரண்டாவது மனைவியும் கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
___
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’