வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 டிசம்பர், 2011

இன்ஸ்பெக்டருக்கு எதிராக பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் பாலியல் தொந்தரவு புகார்


பெண் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கண்டி பொலிஸ் விசேட குற்றச்செயல் பிரிவைச் சேர்ந்த பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மேற்படி ஆண் இன்ஸ்பெக்டரினால் முன் பிணை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை கண்டி பிரதான நீதவான் உதய கரலியத்த ஏற்றுக்கொண்டுள்ளார். தன்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தான் எந்த நேரமும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படலாம் என எதிர்பார்ப்பதனாலலேயே தான் இந்த முன் ஜாமினை கேட்பதாக அவர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார். பிரதான நீதவான், இந்த முன் ஜாமினை 10000 ரூபா காசு, ஒரு இலட்சம் ரூபா சரீர பிணை என்ற நிபந்தனைகளின் கீழ் வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டரின் முறைப்பாட்டின் உண்மை தன்மைப்பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் எஸ்.பெரமுன தமிழ்மிரருக்கு கூறினார். Tweet

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’