வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 டிசம்பர், 2011

குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு உள்ளது: கனடா


25 வருடகால யுத்த நடவடிக்கைகளின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மிக மோசமான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக பிரதமர் ஸ் ரீபன் ஹார்பர் விமர்சித்திருந்தார்.
இதனையடுத்தே வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயட் இதனைக் கூறினார். 'நல்லிணக்கத்தை ஏற்படுத்த சில நாடுகள்; 10 வருடங்களை எடுத்துள்ளன. சில நாடுகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேயில்லை. ஆனால் இது மிக முக்கியமானது' என ஜோன் பயட் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புப் படையினர் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள இலங்கை அரசாங்கம், இது தொடர்பான விசாரணையை நடத்துவது குறித்தும் மறுப்புத் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஐ.நா.வின் அண்மைய அறிக்கையை ஜோன் பயட் பாராட்டியுள்ளார். 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டுமென இலங்கைக்கு மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. 'யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்களானபோதிலும்; தமிழ் சமூகத்தவருடனான அர்த்தமுள்ள நல்லிணக்கமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை காணவில்லை' என அமைச்சர் ஜோன் பயட்; தெரிவித்துள்ளார். 'இலங்கை அரசாங்கத்தின் வளர்ந்து வரும் ஏதேச்சாதிகாரப் போக்கையே நாங்கள் கண்டுள்ளோம்' என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’