வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 டிசம்பர், 2011

இலக்கை அடையும் வரை மக்கள் போராட்டம் தொடரும்: ஐ.தே.க. அறிவிப்பு _


லக்கை அடையும் வரை மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தின் மோசடிகள் மற்றும் அடக்கு முறைகள் உள்ளிட்ட ஜனநாயக விரோத ஆட்சியை முடிவிற்கு கொண்டுவர ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று ஐ.தே.க. குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடந்த 29ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் பேரணி வெற்றியளித்துள்ளது. இதில் பங்களிப்புகளை செய்த அனைத்து தரப்புகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு ஹைப் பாக் மைதானத்தில் நடைபெற்ற அரசிற்கு எதிரான போராட்டம் வெற்றியளித்துள்ளது. இப் போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களாலும் பங்களிப்புகள் வழங்கப்பட்டது. அரசியல் கைதியாக உள்ள சரத் பொன்சேகாவின் விவகாரம், பறிமுதல் சட்ட மூலம், வரவு செலவுத் திட்டம் என்பவற்றை எதிர்த்து தொடர்ந்தும் போராட்டங்கள் அடுத்த மாதம் தொடக்கம் முன்னெடுக்கப்படும். பொது மக்களுக்கு எந்த வகையிலும் நிவாரணங்களை வழங்காது அரசாங்கம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் நாட்டின் வளம் சீரழிந்துள்ளது. எனவே வெற்றியிலக்கை அடையும் வரை போராடுவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’