வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 டிசம்பர், 2011

சம்பவங்களின் உண்மைத் தன்மையை மக்கள் அறிந்து கொள்ள உதவுவதாகவே ஊடகங்களின் பணிகள் அமைந்திருக்க வேண்டும் - பத்திரிகையாளர் மாநாட்டில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர்

கி டைக்கின்ற தகவல்களை தீர ஆராய்ந்து செய்திகளை வெளியிடுவதன் மூலம் சம்பவங்களின் உண்மைத் தன்மையை பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவுவதாகவே ஊடகங்களின் பணிகள் அமைந்திருக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கட்சியின் நிகழ்கால எதிர்கால செயற்பாடுகள் மற்றும் யாழ் மாநகர சபை தொடர்பில் வெளியான செய்திகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் இன்று (07) கட்சியின் யாழ் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

கட்சி மேற்கொண்டு வரும் அபிவிருத்தி மற்றும் அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது

போராட்டம் தவறான பாதையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே அரசுக்கெதிரான செயற்பாடுகள் எமது மக்களுக்கு எந்த பலனையும் தந்து விடப்போவதில்லை என்ற எமது தலைவரின் வழிகாட்டல்களுக்கு இணங்க அரசாங்கத்துடன் நேர்மையான வெளிப்படையான புரிதலைக் ஏற்படுத்திக் கொண்டதன் பலனாகவே கட்சியை ஆரம்பித்த காலத்திலிருந்து பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக எப்போதும் உதவி வருகின்றோம்.

மக்களுக்காக அரசுடன் பேசி உதவிகளை முன்னெடுத்துவரும் எமது பணிகள் பற்றி மாற்றுக் கட்சியினரால் எப்போதும் விஷமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. இவை ஒன்றும் எமக்கு புதிய பிரச்சினைகள் அல்ல.

எமது தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் எமது கட்சி உறுப்பினர்களும் உண்மையாக மக்களுக்கு ஆற்றும் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஊடகவியலாளர்களாகிய நீங்கள் உண்மைகளை எழுதி வெளியிட்டு உதவவேண்டும்.

தேர்தலின் போது மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதியின் பிரகாரமே யாழ் மாநகர சபையின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கபட்டு வருகின்றன. மாநகர சபையின் ஒரு சில உறுப்பினர்கள் தமது சொந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்பதற்காக கட்சி மீதும் மாநகர சபை மீதும் குற்றச் சாட்டுகளை கூறிவருகின்றனர் எனத் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த  யாழ் மாவட்ட அமைப்பாளர் சபை உத்தியோகத்தர்களுடன் முறைகேடாக நடந்து கொள்ள முயற்சித்ததாக வெளிவந்த செய்திகளை அடுத்து யாழ் மாநகர சபை உறுப்பினர் மங்களநேசன் கட்சியின் ஒழுங்காற்று நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். தம் தவறுகளை மறைக்க சபை முதல்வர் மீது அவர் பழி சுமர்த்த முனைவது வேடிக்கையானது.

அவர் பத்திரிகையாளர்களை சந்தித்திருப்பது கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு முரணானது என்றாலும் அவரின் கருத்து வெளியிடும் சுதந்திரத்தில் நாம் தலையிட விரும்ப வில்லையெனத் தெரிவித்தார்.

தமது பிரதி முதல்வர் பதவியை இராஜினாமா செய்தமை குறித்து கருத்து வெளியிட்ட றீகன் மாநகர சபையின் முஸ்லீம் உறுப்பினர் ஒருவருக்கு சுழற்சி முறையில் இப் பதவியை கையளிப்பதென பதவியேற்பின் போது மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக தமது பதிவியை இராஜினாமா செய்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச் சந்திப்பில் யாழ் மாநகர சபை உறுப்பினர் நிஷாந்தன் பற்றி பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அவர் எதிர்பார்த்தவைகளை மாநகர சபை மூலம் அடைந்து கொள்ள முடியவில்லை தமது தவறுகளை மறைக்க மாநகர சபையின் செயற்பாடு மீது குறை கூறி தப்பிக்க முயல்கின்றனர்.

நேற்று முன்தினம் என்னுடன் தொர்பு கொள்ள முடியவில்லை என பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அச்சமயம் அலரி மாளிகையில் இலங்கையின் உள்ளூராட்சி மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டதால் தொலைபேசி அழைப்புகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டார்.

குடாநாட்டில் தற்போது இடம்பெறும் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த மாவட்ட அமைப்பாளர் சில மாதங்களுக்கு முன்னர் கிறீஸ் மனிதன் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வை நாம் பெற்றுக் கொடுத்தது போன்று இவ்வாவறான சம்பவங்களையும் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

இச் சந்திப்பில் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தலைவர் காந்தன் வேலணை பிரதேச சபையின் தலைவர் சிவராசா (போல்) நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் றெக்சியன் (ரஜீவ்) ஈ.பி.டி.பி.யின் வலிகாமம் பிரதேச இணைப்பாளர் ஜீவன் வடமராட்சி பிரதேச இணைப்பாளர் சிறீரங்கேஸ்வரன் காரைநகர் பிரதேச இணைப்பாளர் ரஜனி புங்குடுதீவு பிரதேச இணைப்பாளர் நவம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’