வ ரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள வரலாற்று சான்றுகள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வண.எல்லாவல மேதானந்த தேரர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய மரபுரிமை சொத்துக்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன குடும்பிமலை விகாரையின் கோபுரம் புதையல் தேடுவோரால் சேதமாக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் புதையல் தோண்டுவோரால் கிண்டப்பட்ட கிடங்கொன்றில் சிறுத்தையொன்று வசித்து வந்ததை நான் கண்டேன். இந்த சிறுத்தை இதற்கு முன்னரே குறித்த பகுதிக்கு வந்திருக்குமானால் புதையல் தேடி வந்தோர் பயந்து ஓடியிருப்பர் என்று கிண்டலாகப் பேசிய மேதானந்த தேரர், வில்பத்து சரணாலயத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’