வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன்: அமைச்சர் டக்ளஸ்
வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என ஊடகவியலாளரொருவர் அமைச்சர் டக்ளஸிடம் வினவியதற்கு, இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என கூறினார். இந்த முதலமைச்சர் பதவியின் ஊடாக தமிழ் சமூகத்திற்கு இன்னும் பல சேவைகளை செய்ய முடியும் எனவும் அவர் கூறினார். எனினும், அமைச்சரவையிலுள்ள ஒரே ஒரு தமிழ் அமைச்சரான என்னை இழக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விருப்பமில்லை என அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்தார். Pix By:Pradeep Dilrukshana
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’