காணி அதிகாரமானது அதிகாரப் பகிர்வின் மையமாக இருக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத் தூதுக்குழுவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தபோது த.தே.கூட்டமைப்பு இக்கோரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. இது தொடர்பாக டெய்லி மிரருக்கு
கூறுகையில், சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினால் காணி அதிகாரம் பகிரப்படுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தநிலையிலும் 1995 அம் ஆண்டு தமிழ்க்கட்சிகள்அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது தமிழக் கட்சிகளின் பிரதான கோரிக்கையாக இது இருந்த நிலையிலும் இக்கோரிக்கை தமது கட்சி வலியுறுத்தியதாகத் தெரிவித்தார். எனினும் காணி அதிகாரத்தைப் பகிர்வதற்கு அரசாங்கத் தூதுக்குழுவினர் மறுப்புத் தெரிவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையான முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகளைப் போன்றதல்ல என அவர்கள் தெரிவித்தனர். அப்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகளிலும் காணி அதிகாரப் பகிர்வு தெரிவிக்கப்பட்டிருந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனினும் இது தொடர்பான தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படாமல் கலந்துரையாடல்கள் முடிவுற்றன. அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளுக்கான திகதியை தீர்மானிப்பதற்காக இருதரப்பினரும் இன்று சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றைய கலந்துரையாடலில் அரசாங்கத் தூதுக்குழுவுக்கு அமைச்சர் நிமயல் சிறிபால டி சில்வா தலைமை தாங்கினார். அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் இதில் அங்கம் வங்கித்தனர். ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்அங்கம் வகித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’