வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 டிசம்பர், 2011

ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிகூடிய ஓட்டம் பெற்றவரானார் ஷேவாக்: சச்சின்டெண்டுல்கரின் சாதனை முறியடிப்பு


மேற்கிந்திய அணியுடனான 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணித்தலைவர் வீரேந்தர் ஷேவாக், 201 ஓட்டங்களைக் கடந்ததன் மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்றவர் எனும் சாதனைக்குரியவராகியுள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி 24 ஆம் திகதி தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களைப் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது. இந்தூரில் நடைபெறும் மேற்கிந்திய அணியுடனான 4 ஆவது போட்டியில் வீரேந்தர் ஷேவாக் 149 பந்துகளில் 219 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். 7 சிக்ஸர்கள் 25 பௌண்டரிகளையும் ஷேவாக் விளாசினார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 15 ஆவது சதத்தை 69 பந்துகளில் பூர்த்தி செய்த ஷேவாக், 140 பந்துகளில் இரட்டைச் சதத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 418 ஓட்டங்களைப் பெற்றது. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பெற்ற ஆகக்கூடுதலான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். கௌதம் காம்பீர் 67ஓட்டங்களையும் சுரேஷ் ரெய்னா 55 ஓட்டங்களையும் பெற்றனர். 2009 ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு 414 ஓட்டங்களைப்பெற்றமையே இதுவரை இந்திய அணியின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’