ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வலியுறுத்தினார்.
ஊடகவியலாளர் எக்னெலிகொட நீண்டகாலமாக காணாமல் போயுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். ஊடகவியலாளர்கள் வாகனக் கடன்பெறுவதற்கு வரவுசெலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட 25 வருட சேவைக்கால நிபந்தனையை குறைக்குமாறும் அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்க கோரினார். இதன்மூலம் இளம் ஊடகவியலாளர்கள் நன்மையடைவர் எனவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’