பிரதித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இழந்துள்ள நிலையில், நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள தனது அலுவலக அறையை காலிசெய்வதற்கு அவர் இன்று தீர்மானித்துள்ளதாக நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரு ஜயசூரியவின் நிர்வாகப் பணிகளுக்காக இந்த அறை பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் பிரதித் தலைவர் பதவியை இழந்தார். அவர் தனது அலுவலக அறையை காலிசெய்ய தீர்மானித்துள்ள நிலையில், அவரது பொருட்களை பணியாளரொருவர் பொதியிட்டுக்கொண்டிருந்தார். பிரதித் தலைவர் பதவியை இழந்துள்ள கரு ஜயசூரிய கட்சியின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும்; வெளியேற நேர்ந்துள்ளது. இதேவேளை, சிறிகொத்த பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’