வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 டிசம்பர், 2011

தன்னியக்க பண இயந்திரத்திலிருந்து ரூ.6.6 மில்லியன் கொள்ளை


ன்னியக்க பணம்பெறும் இயந்திரத்தினை உடைத்து சுமார் 6.6 மில்லியன் ரூபாயினை கொள்ளையடித்த சம்பவமொன்று நேற்றிரவு கந்தளையில் இடம்பெற்றுள்ளது. வான் ஒன்றில் வந்த குழுவொன்று அங்குள்ள வங்கியின் தன்னியக்க பணம்பெறும் இயந்திரத்தினை உடைத்து, அதிலுள்ள பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகையில்... இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை. இருப்பினும் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிலரே இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நம்புகின்றோம். குறித்த சம்பவம் இரவு 8 மணிக்கும் காலை 8 மணிக்குமிடையில் இடம்பெற்றுள்ளது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்காக இரு விசேட பொலிஸ் குழுக்களை நியமித்திருக்கிறோம். இதில் கந்தளை பொலிஸ் அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள். மேலதிக விசாரணைகள் இந்த பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். கூடிய விரைவில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்போம் என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’