வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 நவம்பர், 2011

திருகோணமலை லிங்க நகர் மக்களை வெளியேற்ற வேண்டாம் TNA MP சம்பந்தரிடம் லண்டனில் வேண்டுகோள்


மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் லண்டன் வந்திருந்த போது திருகோணமலை மக்களும் நண்பர்களும் எழுதிய திறந்த மடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நவம்பர் 06 இல் லண்டனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார நிகழ்விலேயே “திருகோணமலை – லிங்கநகர் குடியிருப்பாளர்கள் பிரச்சினை” தொடர்பாக திருகோணமலை மக்களும் நண்பர்களும் ‘தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ஐயாவுக்கு ஒரு திறந்தமடல்’ என்ற தலைப்பிட்டு அனுப்பிய மடல் கையளிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையை அறிந்திருப்பதாகக் குறிப்பிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அதனைக் கவனத்திற்கொள்வதாக திருகோணமலை மக்கள் நண்பர்கள் சார்பில் மடலைக் கையளித்த தேசம்நெற் ஆசிரியர்களில் ஒருவரான த ஜெயபாலனிடம் தெரிவித்தார். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன் ஐயாவுக்கு ஒரு திறந்தமடல்’ மதிப்புக்குரிய இரா சம்பந்தன் ஐயாவுக்கு திருகோணமலை – லிங்கநகர் குடியிருப்பாளர்கள் பிரச்சினை ஐயா, நாங்கள் திருகோணமலை வாழ்மக்களும் அவர்களின் நண்பர்களும். இக்கோரிக்கை மடலை தேசம்நெற் இணையத்திற்கு அனுப்பி உங்களுக்கு சேர்ப்பிக்கிறோம். எமக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தமிழ் மக்களின் உரிமையைக் காப்பாற்றவும் தமிழ் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கவும் நாங்கள், தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ் தேசியக் கட்சிக்கும் உங்களுக்கும் வாக்களித்து வருகின்றோம். கடந்த காலத்தில் நாங்கள் பட்ட அவலத்தை உங்களுக்கு நாங்கள் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அந்த அவலங்களை எல்லாம் எங்கள் உரிமைக்கான கோஸங்களாக்கி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டி இன்று என்னஎன்னவோ எல்லாம் நடந்துவிட்டது. இன்று எங்களில் சிலர் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டு திக்குத் தெரியாமல் பல்வேறு இடங்களில் போய் வீழ்ந்து முளைவிட்டோம். அவ்வாறு முளைவிட்ட இடங்களில் லிங்கநகரில் உள்ள உங்கள் காணியும் ஒன்று. அங்கிருந்த சிங்களக் குடியேற்றவாசிகள் அப்போது ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் வெளியேற தமிழர்கள் அக்காணிகளை பணம்கொடுத்து வாங்கினர். கடந்த இருபது வருடங்களுக்கு மோலாக 56 குடும்பங்கள் நிரந்தரமான வீடுகளை அமைத்து அங்கு குடியிருக்கின்றன. அவர்களின் பெயர் விபரங்கள் கீழே: (01) அருட்பிரகாசம் – ஜமுனா, (02) சிவபாதம் – சுமதி, (03) பொன்னம்பலம் – மல்லிகா, (04) குருகுலசிங்கம் – மகாலெட்சுமி, (05) சிவலிங்கம் – செல்லநாச்சியார், (06) செல்லத்தம்பி – துளசிமணி, (07) கணகசிங்கம் – உதயராணி, (08) பற்றீக் – ஸ்ரெலர், (09) பேரின்பராசா – ராசகுலசிங்கம், (10) தேவலிங்கம் – நீத்தா, (11) தேவலிங்கம் – தேவவதனா, (12) கந்தையா – சண்முகநாதன், (13) இராசதுரை – வணசா, (14) இராசையா – தட்சணாமூர்த்தி, (15) செல்வநாயகம் – அருள்கிருபாகரன், (16) செல்வநையினார் – இராதாமோகன், (17) தயாபரன் – வனிதா, (18) உதயகுமார் – அன்னலட்சுமி,(19) ஜெயானந்தன் – ஜெசிகா, (20) மகேஸ்வரன் – தேவசீலி, (21) சந்திரமேகன் – தேவமனோகரி, (22) சூசைப்பிள்ளை – ஜோதிமலர், (23) ரஞ்சன் – கேமளாதேவி, (24) நாகராசா – நவரெத்தினம், (25) முத்துராசா – /ப்பிரியா, (26) ரட்ணராசா – வேணுகுமாரி, (27) சுகுணசேகரம் – குமாரதாஸ், (28) விபுணசேகரனம் – அருள்மணி, (29) சுந்தரலிங்கம் – வித்தியா, (30) தேவலிங்கம் – தேவகாஞ்சனா, (31) நகுலேஸ்வரன், (32) விசாகரெத்தினம் – /நிவாசன், (33) ஞானநேகரம் – லிரோஜிதா, (34) பேச்சுமுத்து – இராமநாதன், (35) சந்திரகுமாரன் – நந்தகுமாரன், (36) இராமநாதன் – குணரெத்தினம், (37) சுவேந்திரலிங்கம் – சரோஜாதேவி, (38) இருதயநாதன் – வள்ளியம்மை, (39) ஆறுமுகம் – இராஜசுந்தரம், (40) இராமச்சந்திரன் – உதயகுமார், (41) நடராசா, (42) N. திருச்செல்வம், (43) மாதவன், (44) சந்திரலிங்கம் – பரிமளாதேவி, (45) ஜெயவீரசிங்கம் – சூரியபிரகாஸ், (46) விஜயகுமார் – வேதநாயகம், (47) வைரமுத்து – நாகராசா, (48) செளந்தரிப்பிள்ளை – நாகராசா> (49) பாலச்சந்திரன் – ரஞ்சனி, (50) சுசிகரன் தாத்தயசீலி, (51) மரியநாயகம் – ஜெராட்தனிநாயகம், (52) செபமாலை – பீலிக்ஸ் செல்வராசா, (53) கேசவன் – தங்கத்துரை, (54) மோகன் – விஜயா, (55) கு. நாகேஸ்வரி, (56) சிவபுண்ணியம் – லிங்காரெத்தினம் – ஜோதிமகாலெட்சுமி தற்சமயம் மேற்படி லிங்கநகர் காணியில் குடியிருப்பவர்களுக்கு எதிராக நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அதனைத் தவிர்ப்பதானால் அவர்கள் மீண்டும் உங்களுக்கு பணம் செலுத்தி காணிக்கான பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஐயா, அம்மக்களுடைய பொருளாதார நிலையையும் வாழ்நிலையையும் கருத்திற்கு எடுத்து சிங்களமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திருமலைநகரின் சிங்கள மயமாக்கலைத் தடுக்கவும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணவும் நீங்கள் இக் குடியிருப்பாளர்களுக்கு தயவுகூர்ந்து அந்தக் காணிகளை அன்பளிப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இங்ஙனம் திருகோணமலை மக்களும் நண்பர்களும். (நன்றி தேசம்நெட்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’