வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 நவம்பர், 2011

எமது சவால்களை தீர்ப்பதற்கு இறக்குமதியாகும் கருத்துக்களில் தங்கியிருக்க முடியாது: ஜனாதிபதி


மது பிரச்சினை எதுவாக இருந்தாலும் அது பயங்கரவாதமாக, பிரிவினைவாதமாக, சுற்றுச்சுழல் பிரச்சினையாக இருப்பினும் அதை தீர்க்க எமது சொந்த மூலோபாயங்களை பயன்படுத்த வேண்டுமேயொழிய இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்கள் மற்றும் கொள்கைகளில் தங்கியிருக்க கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்ல, ரஜமல்வத்த விளையாட்டு திடலில் இடம்பெற்ற 'தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டம்' தொடர்பிலான பிரதான நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் பன்னெடுங் காலமாக இருந்துவரும் மரபுகள், கலாசாரங்கள், சமய விழுமியங்கள் ஆகியன எமது பிரச்சினைகளை தீர்க்கவல்லன. நாம் சூழலை நேசிக்கும், தாவரங்களை பாதுகாக்கும் தேசத்தவர்கள். மரம் நடத்தவறும் எவரும் இந்த நாட்டின் மைந்தன் என்றோ மகள் என்றோ தன்னை கூறும் அருகதை அற்றவர். தேசிய மர நடுகை நிகழ்ச்சி திட்டம் எமது இளம் சந்ததியினரை கருத்தில் கொண்டே செயற்படுத்தப்படுகின்றது. இன்று நாம் நடப்போகும் 1.1 மில்லியன் மரங்கள் இந்நாட்டின் இயற்கை சூழலை நிரந்தரமாக பாதுகாக்க உதவும். எமது முன்னோரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகளினால் நாம் நன்மையடைந்து வருகின்றோம். எனவே எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வளமான சுற்றுச்சூழலை விட்டு செல்வது எமது கடமையாகும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’