வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 நவம்பர், 2011

உத்திரபிரதேசம் நான்கு புதிய மாநிலங்களாக பிரிக்கப்படும் : முதல்வர் மாயாவதி அதிரடி


ந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தை நான்கு புதிய மாநிலங்களாக பிரிப்பதற்கு மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அம்மாநிலத்தின் முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவியுமான மாயாவதி இன்று அறிவித்துள்ளார்.
246,283 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும் சுமார் 20 கோடி சனத் தொகையையும்கொண்டதாக உத்திரபிரதேச மாநிலம் விளங்குகிறது. இந்நிலையில் பூர்வாஞ்சல் (கிழக்கு உ.பி.), பஸ்சிஹிமாஞ்சல் (மேற்கு உ.பி.), புந்தெல்கண்ட், ஆவாத் (மத்திய உ.பி.) ஆகிய நான்கு புதிய மாநிலங்களாக உத்திரபிரதேசம் பிரிக்கப்படும் என மாயாவதி தெரிவித்துள்ளார். சிறிய மாநிலங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதற்கும் அபிவிருத்தி செய்யப்படுவதற்கும் வசதியானவை என மாயாவதி கூறுகிறார். இதற்கான மாநில அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. உத்திரபிரதேச மாநில சட்டசபை 403 அங்கத்தவர்களை கொண்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற லோக்சபாவுக்கு இம்மாநிலத்திலிருந்தே அதிக (80) உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலமைப்பின்படி மாநிலங்களுக்குப் பெயரிடுதல், மாநிலங்களை மீள் ஒழுங்குபடுத்தல், புதிய மாநிலங்களை உருவாக்குதல் என்பன மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உரியவை என முதலமைச்சர் மாயாவதி கூறினார். எனினும் இவ்விடயத்தில் சாதகமான நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மத்திய அரசாங்கம் இதுவிடயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இது குறித்து எழுத்துமூல கோரிக்கையையும் மாயாவதி விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் உத்திரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களின் உணர்வுகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்குடன் இவ்வறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு, கிழக்கு, புந்தெல்கண்ட் பிராந்தியங்கள் சிறிய மாநிலங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’