சுகததாஸ அரங்கத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹண விஜயவீரவின் 22ஆவது நினைவுதின நிகழ்வில் கட்சியை விமர்சனம் செய்த மத்தியகுழு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் கூறினார்.
ரோஹண விஜயவீரவின நினைவுதின நிகழ்வை மக்கள் விடுதலை முன்னணியும் இக்கட்சியிலிருந்து பிளவுபட்டுச் சென்றுள்ளவர்களும் தனித்தனியாக நடத்தியிருந்தனர். தனியாக ரோஹண விஜயவீரவின் நினைவுதின நிகழ்வை நடத்தியமைக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ள முடியாதெனவும் இருப்பினும் முன்னாள் மத்தியகுழு உறுப்பினர்கள் கட்சியை விமர்சனம் செய்தமைக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார். 'பொதுமக்கள் மத்தியில் இந்த உறுப்பினர்கள் கட்சியை விமர்சித்து வருகின்றனர். நினைவுகூரும் நிகழ்வில் அவர்கள் அதனைச் செய்தனர். நாங்கள் அவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பவுள்ளோம். பின்னர் அவர்களுக்கு எதிராக நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’