எமது மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் மிகுந்த அக்கறை காட்டி வரும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் எம்மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்கவும் அக்கறையுடன் செயற்படுவார் என்ற நம்பிக்கை எமக்குண்டு என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் (18) ஜனாதிபதி அவர்களின் 66வது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் இப்பகுதி யுத்தத்தின் கொடூரத்துள் சிக்கி முற்றாக அழிவுற்றிருந்த காலத்தில் எம்மக்கள் ஒட்டு மொத்தமாக இடம் பெயர்ந்து சொல்லொனா துன்பங்களுக்கு முகம் கொடுத்தனர் பின் நலன்புரி நிலையங்களில் வாழ வேண்டிய நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டனர். தொடர்ந்து மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றன எம்மக்கள் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்த காலத்தில் குறைந்தது மூன்று வருடங்களுக்கு இவர்கள் மீள குடியமர்த்தப்படமாட்டார்கள் என சில தரப்புக்கள் பிரச்சாரங்கள் செய்தன பலர் மீள்குடியேற்றத்தை தாமதப்படுத்துமாறும் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினர். ஆனால் இவற்றையெல்லாம் செவிசாய்காமல் மிகக் குறுகிய காலத்திற்குள் மக்களை அரசாங்கம் மீளக்குடியமர்த்தியது இதற்;குக் காரணமாக செயற்பட்டவர் மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களே மேலும் அவரின் பணிப்பிற்கமைவாக இன்று எமது பகுதியில் பாரிய அபிவிருத்திப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் புனரமைக்கப்படாத பூநகரி சங்குபிட்டி பாலத்தை எண்நூறு கோடி ருபா செலவில் அமைத்தமை தொடக்கம் கிளிநொச்சியில் பொருளாதார சந்தையை அமைத்தல் மாதிரி சந்தையை அமைத்தல் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தினை அமைத்தல் பளை மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் வைத்திய சாலைகளை அமைத்தல் வீதிகளை புனரமைத்தல் போன்ற பாரிய செயற்பாடுகளையும் அவர் ஆரம்பித்துவைத்துள்ளார் அத்தோடு பாடசாலைகளை புனரமைப்பதுடன் மேலும் பல உட்கட்டுமான திட்டங்களையும் அவர் நடைமுறைப்படுத்தியுள்ளார் இதேவேளை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் தலைமையில் விவசாயத்தினை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் ஜனாதிபதி அவர்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றார். இவற்றில் சில பாரிய திட்டங்களின் பயனை மக்கள் பெறுவதற்கு சிலகாலங்கள் காத்திருக்கவேண்டும். இந்நிலையில் எம்மக்கள் எதிர்பார்க்கின்ற நிம்மதியான நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வையும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஏற்படுத்தி தருவார் அவரது 66வது அகவையில் அது நிச்சயமாக நடந்தேறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு ஏனெனில் அவர் மூலமாக மட்டுமே அதை சாதிக்கமுடியும். எனவே சர்வதேச நாடுகளின் வேண்டுதல்களுக்கமைவாகவும் எம்மக்களின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும் அவர்செயற்படுவார் என நாம் எதிர்பார்க்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகான ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி அவர்களும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நீல்தலுவத்த கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் சச்சுமுருகேசு அக்கட்சியின் கிளிநொச்சிமாவட்ட அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் ஆகியோரும் மதகுருமார் பிரதேச செயலர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’