கணவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு யுத்த காலத்தில் காணாமல் போய்விட்டார் என்று பொலிஸில் பொய் முறைப்பாடு செய்திருந்த பெண்ணொருவரை கண்டி, ஹத்தரலியத்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
1989ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான மேற்படி பெண், 22 வருடங்களுக்கு முன் நாட்டின் தென் பிரதேசங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளின் போது தனது கணவர் காணாமற் போனதாக முறைப்பாடு செய்து பொலிஸாரை திசை திருப்பி இருந்ததாக தெரிவிக்ககப்படுகின்றது. இது சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை ஹத்தரலியத்த பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’