இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லக்ஷர் ஈ. தைபா அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சீக்கிய தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருவதாக மஹாராஷ்டிரா மற்றும் மும்பை பொலிஸாருக்கு இந்திய புலனாய்வுப் பணியகம் (ஐ.பீ) அறிவுறுத்தியுள்ளது.
மறைந்திருந்த இவர்கள் தற்போது தமது செயற்பாடுகளை தொடங்கியுள்ளனர் என இந்திய மத்திய புலனாய்வு அதிகாரியொருவர் கூறியுள்ளர்ர. புலனாய்வுப் பணியகம் தனது இரகசிய அறிக்கையில், சீக்கிய தீவிரவாதிகளை உன்னிப்பாக கவனிக்கும்படி கூறியிருப்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது. இந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள்மற்றும் சீக்கிய தீவிரவா குழுக்களுக்குள் லக்ஷர் ஈ தைபா ஊடுருவி வருவதாக நம்பகத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி கூறினார். வெடிப்பொருட்கள் நிரம்பிய டாட்டா இன்டிகா கார் ஒன்று புதுடில்லி நேர்கி சென்றுகொண்டிருந்தபோது அம்பாலா எனும் இடத்தில் பிடிபட்டமை, அவர்கள் செயற்படத் தொடங்கியிருப்பதை காட்டுகின்றது என எனத் தெரிவிக்கப்படுகிறது. லக்ஷர் ஈ தைபாவின் ஹல்ஸா அமைப்புக்கும் எல்.ரி.ரி.ஈ.க்கும் இடையிலான தொடர்பு புதியது அல்ல எனவும் அது பகிரங்க இரகசியம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்திய முஜாஹிதீன் அமைப்பின் (ஐ.எம்.) தலைவர்கள் இனங்காணப்பட்டுவிட்டதால் இந்திய முஜாஹிதீன் செயற்பட முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அதனால் லக்ஷர் ஈ தைபா மாற்று வழிகளை தேடி வருவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’