வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 நவம்பர், 2011

வெள்ளைக்கொடி விவகாரத்தால் நாட்டுக்கு ஏற்பட்ட களங்கம் தீரவில்லை: ஜனாதிபதி


வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட களங்கம் இன்னமும் தீரவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றபோது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, 'வெள்ளைக் கொடி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலேயே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அன்று பொதுமக்களின் பின்னால் மறைந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் தாக்குதல்களை நடத்தினர். இன்று அவர்கள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் நின்றுகொண்டு நிதி சேகரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’