வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 நவம்பர், 2011

சிறுமிகளை சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் மகளிர் விடுதி அதிகாரிகள் கைது


ழக்குகளின் சந்தேக நபர்களான சிறுமிகள், நீதிமன்ற உத்தரவின்பேரில் தங்க வைக்கப்படும் விடுதியிலுள்ள சிறுமிகளை துன்புறுத்தியமை தொடர்பாக, விடுதி நிர்வாகி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார்.
இவ்விடுதியிலிருந்து 9 சிறுமிகள் ஒக்டோபர் 19 ஆம் திகதி தப்பியோடிய நிலையில் மினுவாங்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இச்சிறுமிகளை பொலிஸார் விசாரித்தபோது தாம் விடுதி அதிகாரிகளால் மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் இச்சிறுமிகள் தெரிவித்தனர். அதையடுத்து விடுதியின் அதிபர் சுகந்திகா விஜேரட்ன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு மினுவாங்க அதன் பின்னர் மேற்படி மூவரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு கொழும்பிலிருந்து மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’