துபாயில் பொறியியல் அலுவலகமொன்றிலிருந்து நான்கு மடிக்கணினிகளை திருடியதாகவும் மேலும் 18 மடிக்கணினிகளை திருட முயன்றதாகவும் இலங்கையைச் சேர்ந்த சுத்திகரிப்பு ஊழியர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
20 வயதான இந்நபர், ஜூலை 21 ஆம் திகதிக்கு சில தினங்களுக்குமுன் நான்கு கணினிகளை எடுத்துச் சென்றதுடன் பின்னர் மீண்டும் பல கணினிகளை எடுக்க முயன்றதாகவும் அவற்றை ஒளித்துவைத்த போது அவர் அகப்பட்டதாகவும் துபாய் நீதிமன்றமொன்றில் இன்று தெரிவிக்கப்பட்டது மேற்படி சந்தேக நபரின் கடமை நேரத்தின்போது 22 எச்.பி. மற்றும் டொஷிபா ரக கணினிகள் காணாமல் போனதாக புகாரிடப்பட்டதாக அந்நிறுவனத்தின் பாதுகாப்பு பொறுப்பதிகாரி கூறியுள்ளார். இச்சந்தேக நபர் 2 கணினிகளை தனது வீட்டிற்கு கொண்டுசென்றதாகவும் மேலும் இரு கணினிகளை மென்பொருட்களை உட்புகுத்துவதற்காக கணினி கடையொன்றுக்கு கொண்டு சென்றதாகவும் ஒப்புக்கொண்டதாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வாக்குமூலம் அளித்தார். ஏனைய கணினிகளை கூரையொன்றில் மறைத்து வைத்ததாக சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார். இவ்வழக்கின் தீர்ப்பு நவம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’