அதேவேளை, இலங்கையில் இவ்வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறார்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது, அல்லது துன்புறுத்தப்படுவது பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அல்லது அச்சிறார்களுக்கு தெரிந்தவர்களால் இடம்பெறுவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து முறையிடுவதற்காக இலங்கையில் துரித தொலைபேசி சேவை உள்ளதாகவும் பெரும்பாலான முறைப்பாடுகள் அதன்மூலம் பெறப்பட்டு ஊர்ஜிதப்படுத்தப்படுவதாகவும் அவ்வதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க கூறினார். இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளதெனவும் மக்கள் நம்புவதாகவும் சந்தேக நபர்களுக்குள்ள மேற்படி அரசியல் தொடர்புகள் காரணமாக சில சம்பவங்கள் முறையிடப்படாமல் போவதாகவும் அவர் தெரிவித்தார். 15 வயதான இரு சிறுமிகள் அவர்களின் காதலர்களினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் அறிவித்துள்ளனர். இரு சம்பவங்களும் கொழும்பில் இடம்பெற்றதாகவும் கடந்தவாரமும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கவலைகொண்டுள்ளதாகவும் அனோமா திஸாநாயக்க கூறினார்.தேவேளை, இலங்கையில் இவ்வருடம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 7,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறார்கள் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவது, அல்லது துன்புறுத்தப்படுவது பெரும்பாலும் அவர்களின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அல்லது அச்சிறார்களுக்கு தெரிந்தவர்களால் இடம்பெறுவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து முறையிடுவதற்காக இலங்கையில் துரித தொலைபேசி சேவை உள்ளதாகவும் பெரும்பாலான முறைப்பாடுகள் அதன்மூலம் பெறப்பட்டு ஊர்ஜிதப்படுத்தப்படுவதாகவும் அவ்வதிகார சபையின் தலைவி அனோமா திஸாநாயக்க கூறினார். இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளதெனவும் மக்கள் நம்புவதாகவும் சந்தேக நபர்களுக்குள்ள மேற்படி அரசியல் தொடர்புகள் காரணமாக சில சம்பவங்கள் முறையிடப்படாமல் போவதாகவும் அவர் தெரிவித்தார். 15 வயதான இரு சிறுமிகள் அவர்களின் காதலர்களினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் அறிவித்துள்ளனர். இரு சம்பவங்களும் கொழும்பில் இடம்பெற்றதாகவும் கடந்தவாரமும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து பொலிஸாரும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கவலைகொண்டுள்ளதாகவும் அனோமா திஸாநாயக்க கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’