வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 நவம்பர், 2011

'ராஜபக்ஷவுக்கு ஆதரவான இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டினால் தமிழர்கள் மோசமாக நடத்தப்படுகின்றனர்'

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடானது, இலங்கையில் தமிழர்கள் மோசமாக நடத்தப்படுவதற்கு முக்கிய காரணமாகவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.
நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிக்கு தமிழ் மக்களின் பக்கத்தில் இருப்பதற்குப் பதிலாக இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக உள்ளது என இந்திய கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியளார் மாநாட்டில் கூறினார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். 'தமிழ் மக்கள் அனுதாபத்தையோ அவர்களின் புனர்வாழ்வுக்காக (இந்திய) அரசாங்கத்திடமிருந்து நிதியையோ எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பிரஜைகளாக கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமையை நிலைநாட்டுவதற்கே விரும்புகின்றனர்' என ராஜா கூறினார். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகின்ற போதிலும் இந்திய ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கம் மௌனமான பார்வையாளராகவே இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் விடயத்தில் தமிழக மாநில அரசாங்கம் முரண்பாடான நிலைப்பாடடை பின்பற்றுவதாகவும் அவர் கூறினார். இவர்களின் கருணை மனுவை மீள்பரிசீலனை செய்யுமாறு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய கட்சிகளில் ஒன்றாக அதிமுக விளங்கியபோதிலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு உயர் நீதிமன்றில் தமிழக அரசாங்கம் ஆதரவளித்தது எனவும் ராஜா கூறினார். இவ்விடயத்தில் தமிழக சட்டசபையின் தீர்மானத்தை கருத்திற்கொண்டு மத்திய அரசாங்கம் உடன்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’