வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 24 நவம்பர், 2011

சச்சின் ஆட்டமிழக்காமல் 67; நூறாவது சதம் குவிப்பாரா?


மேற்கிந்திய அணியுடனான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்றைய ஆட்டமுடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100 சதத்தை பெறுவதற்காக காத்திருக்கும் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடைபெறும் இப்போட்டியின் 3 ஆவது நாளான இன்று மேற்கிந்திய அணி 590 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் சார்பில் கௌதம் காம்பீர் 55 ஓட்டங்களுடனும் வீரேந்தர் ஷேவாக் 37 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். ராகுல் திராவிட் 82 ஓட்டங்களைப் பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் திராவிட் இன்று 13,000 ஓட்டங்களைக் கடந்தமை குறிப்பிடத்தக்கது. வி.வி.எஸ். லக்ஷ்மன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தற்போது மேற்கிந்திய அணி 309 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’