வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 அக்டோபர், 2011

இராஜதந்திரி என்ற உறுதியை அமெரிக்க நீதிமன்றில் சமர்ப்பித்த சவேந்திர


லங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி சவேந்திர சில்வா தமது இராஜதந்திரி வரப்பிரசாதத்தை அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி கேணல் ரமேஸின் மனைவி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க தென் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இது கடந்த செப்டெம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கான அழைப்பாணை சவேந்திர சில்வாவின் தனிப்பட்ட வீட்டில் சேர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சவேந்திர சில்வாவுக்கு இராஜதந்திரி அந்தஸ்தை வழங்கியது. இதனையடுத்து ராஜாங்க திணைக்களத்தின் ராஜதந்திர தன்மைக்கான அறிக்கையையும் இணைத்து சவேந்திர சில்வாவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எதிர்மனுவைக் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’