யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்திலும் வகுப்புப் பகிஷ்கரிப்பிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் பொதுமன்றத்தில்இந்த கண்டன ஆர்ப்பாட்டமும் வகுப்புப் பகிஷ்கரிப்பும் இன்று திங்கட்கிழமை நடைபெற்று வருகின்றன.
'மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்வதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்த வேண்டும்', 'மாணவர்களாகிய எங்களுக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையென்றால் எங்கே ஜனநாயகம்', 'மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமான ஆயுததாரிகள் வன்முறைகள் மற்றும் அடாவடித்தனங்களை நிறுத்த வேண்டும்', 'வேண்டாம் வேண்டாம் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் வேண்டாம்', 'மாணவர் சக்தி மாபெரும் சக்தி' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் யாழ். பல்கலைக்கழக வெளிவளாகத்தைச் சுற்றி கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் யாழ். கந்தர்மடம் பழம் வீதிச் சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டிருந்தார்.




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’