த மிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யுமாறு நோர்வே அரசாங்கத்திடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளை மீண்டும் தடை செய்வது குறித்து நோர்வே அரசாங்கம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொஹான் கார் ஸ்ட்ரோ மற்றும் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோர்வேக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அந்நாட்டு முக்கிய அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் நிமால் சிறிபாலவுடன் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவும் இணைந்து கொண்டுள்ளார். நல்லிணக்க நடவடிக்கைகளின்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடாது என அமைச்சர் நிமால் சிறிபால கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’