வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 அக்டோபர், 2011

மக்களின் மகிழ்ச்சிக்கு தீபாவளி வழிவகுக்க வேண்டும்: ஜனாதிபதி


தீபாவளித் திருநாள் எமது மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கும் சந்தோசத்துக்கும் வழிவகுக்கின்ற இனிய திருநாளாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தீயவற்றையும் அறியாமையையும் இருளையும் நீக்கி அறிவுடைமையையும் நன்மையையும் வெற்றி கொள்வது ஒளிமயமான மனித வாழ்வின் முடிவில்லாத தேடலாகும். இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மிகப் பெறுமானங்களுக்கேற்ப ஒரு சிறந்த வாழ்க்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஓர் உறுதியான போராட்டத்தின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது என்ற வகையில் மக்களின் ஆன்மிக சுபிட்சத்தை வெளிப்படுத்தி நிற்கும் தீபத் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். இலங்கை வாழ் இந்துக்கள் இந்த விசேட பண்டிகை தினத்தில் உலகெங்கிலுமுள்ள தங்களது சகோதர இந்து மக்களுடன் இணைந்து கொள்கின்றனர். இலங்கையில் இன்று தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது. மக்கள் மத்தியில் சுபிட்சத்தை அதிகரித்துள்ளது. மேலும் மிக நீண்ட காலமாக எமது மக்களை பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைந்துள்ளது. இந்தத் தீபத் திருநாள் இந்து சமயத்தின் பெறுமானங்களைப் போற்றிப் பேணி வரும் மக்கள் மத்தியில் மகிழ்ச்சிச் செய்தியைப் பரப்பி இந்தக் கொண்டாட்டத்தை அமைதியும் சுபிட்சமும் நிறைந்த வகையில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கான உணர்வைக் கொடுக்கும். தீபாவளித் திருநாளின் சமாதானச் செய்தியும் நல்லெண்ண ஒளியும் எமது மக்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கும் சந்தோசத்திற்கும் வழி வகுக்குகின்ற இனிய திருநாளாய் அமைய பிரார்த்திக்கின்றேன். இலங்கை வாழ் இந்து மக்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். ___

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’