வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 அக்டோபர், 2011

தீபாவளி உற்சவத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுப்பு; அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதி தற்கொலை


வுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் குடிவரவு தடுப்பு நிலையமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
27 வயதான மேற்படி இளைஞர் கடந்த நள்ளிரவுக்குப் பின் தனது அறையில் உபாதையான நிலையில் காணப்பட்ட பின்னர் அவுஸ்திரேலிய நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் மரணமானதாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் இருவருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாக விலாவூட் குடிவரவு டுப்பு நிலையத்திலுள்ள அவரின் சகா ஒருவர் தெரிவித்துள்ளார் இதேவேளை தற்கொலை செய்துகொண்ட நபர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒருவர் அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டவர் என வெளியான செய்திகளை அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பிரௌன் நிராகரித்துள்ளார். அந்நபர் மீது அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பினால் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் பல்வேறு நிறுவனங்களுடனான அவரின் தொடர்புகள் ஆராயப்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார். தீபாவளி பண்டிகை வைபவமொன்றில் கலந்துகொள்வதற்கு இவ்விளைஞர் அனுமதி கோரியிருந்தாகவும் அக்கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கிறிஸ் பிரௌன் உறுதிப்படுத்தினார். மக்கள் தமது கோரிக்கைள் மதிப்பிடப்படுவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தேசிய பாதுகாப்புடன் தொடர்டைய விடயங்களில் சமரசம் செய்துகொள்ள முடியாது, செய்துகொள்ளவும் மாட்டோம் என அமைச்சர் கிறிஸ் பிரௌன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’