லிபியாவின் முன்னாள் அரசத் தலைவர் கேணல் கடாபியின் உடல் பாலைவனத்தில் ஒரு ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டுவிட்டது.
செவ்வாய்க்கிழமை காலை உடல் புதைக்கப்பட்டதாக லிபியாவின் இடைக்கால நிர்வாக சபையைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கேணல் கடாபியின் மகனான முடாசிம்மின் உடலும், கடாபியின் உடல் அருகே புதைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது கடாபியின் சில உறவினர்களும் சில அதிகாரிகளும் அங்கிருந்ததாக மிஸ்ராட்டாவில் உள்ள ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். கடாபி மற்றும் அவரின் மகனின் உடல்கள் திங்கட் கிழமை வரை மிஸ்ராட்டா நகரில் இருக்கும் ஒரு குளிரூட்டப்பட்ட இறைச்சிக் கூடத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் இருவரும் பிடிபட்ட பிறகே இறந்துள்ளனர். இவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’