வ டக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் காணிப்பதிவு நடைமுறையை கூட்டமைப்பினர் எதிர்ப்பதானது அநீதியானதாகும். வடக்கு கிழக்கு மக்களின் நலன் கருதியே இந்த வேலைத்திட்டத்தை நாங்கள் முன்னெடுக்கின்றோம். காணிப்பதிவு முன்னெடுப்பதன் அவசியம் கூட்டமைப்புக்கு தெரிந்துள்ள போதிலும் அவர்கள் அதனை எதிர்க்கின்றனர் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்றத்தினால் உண்மையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் என்பதே எமது கொள்கையாகும். இருப்பினும் அரசாங்கம் புதிதாக எந்தவொரு சிங்களக் குடும்பத்தையும் வடபகுதியில் மீள்குடியமர்த்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, "வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் பொருட்டே அங்கு காணிப்பதிவுகளை முன்னெடுத்து வருகின்றோம். காணி விவகாரங்கள் தொடர்பில் அப்பகுதிகளில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றைத் தீர்த்துவைப்பது அவசியமானதாகும். கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள காணி உரிமையாளர்களிடம் அவற்றுக்கான எந்தவொரு ஆவணமும் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’