அமெரிக்காவில் தலைமறைவாக வாழ்கின்றவரும் குமரன் பத்மநாதனுக்காக நிதி சேகரித்தவருமான ஒருவரை கைதுசெய்வதற்காக சிவப்பு பிடியாணையொன்றை கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஐயா என அழைக்கப்படும் இவர் அமெரிக்கா, கனடா, மலேஷியா, நோர்வே, இலங்கை மற்றும்; ஜரோப்பிய, ஆசிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்தாரென்றும் நீதிமன்றத்தில் பிரசன்னமாக தவறிய இவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருவதாகவும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி றியாஸ் பறி நீதிமன்றத்தில் கூறினார். சட்ட மா அதிபர் சுப்பிரமணியம் சிவகுமார் அல்லது ராஜன் மற்றும் பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஐயா ஆகிய இருவர் மீதும் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதனின் நிதிக்கும் வேறு சொத்துக்களுக்கும் பொறுப்பாக இருந்தனரென குற்றஞ்சாட்டி வழக்குத் தொடுத்திருந்தார். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல வணிக நிறுவனங்களை நடத்தினரெனவும் இந்த இயக்கத்துக்காக கப்பல்கள் , படகுகளை கட்டியவர்களெனவும் சந்தேகிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’