வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 அக்டோபர், 2011

கேணல் கடாபி உயிரிழந்தார்


லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபி காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் இடைக்கால நிர்வாக கவுன்ஸில் பேச்சாளர் ஆப்தில் மஜித் ராய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
'அவரின் தலையில் காயம் ஏற்பட்டது. அவரின் குழுவினருக்கு எதிராக கடும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் பலியாகிவிட்டார் என ஆப்தில் மஜித் கூறியுள்ளார். எனினும் இத்தகவலை சுயாதீன வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. கடாபியின் விதியை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்: ரஷ்ய ஜனாதிபதி லிபியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் விதியை லிபிய மக்களே தீர்மானிக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ் சற்று முன்னர் கூறினார். ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட கேணல் கடாபி அவரின் சொந்த ஊரான சேர்ட்டேவில் காயமடைந்த நிலையில் லிபிய தேசிய இடைக்கால கவுன்ஸில் படைகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவ் இவ்வாறு கூறினார். ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவுடனான சந்திப்பின் பின்னர் ரஷ்ய ஜனாதிபதி மெத்வதேவ் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இதேவேளை கேணல் கடாபி கைது செய்யப்பட்டுள்ளமை உறுதிப்டுத்தப்பட்டால் அது சிறந்த செய்தியாகும் என நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’