வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 அக்டோபர், 2011

அரச உத்தியோகஸ்தர்கள் லஞ்சம் பெற்றால் முறையிடுங்கள் : யாழ் அரச அதிபர்


யாழ். குடாநாட்டில் மக்களுக்கு சேவையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் மக்களோடு கண்டிப்பாக நடந்து கொண்டால் அல்லது மக்களுக்கு சேவையாற்றுவதற்கு லஞ்சம் பெற்றுக் கொண்டால் உடனடியாக பொதுமக்கள் தன்னிடம் முறையிடுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "யாழ்.குடாநாட்டில் அரச சேவையில் இருப்பதவர்கள் மக்களோடு அன்னியோன்யமாக இருக்கவேண்டும். சில உத்தியோகஸ்தர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தயங்குவது தொடர்பாகவும், மக்களுடன் கண்டிப்பாக நடந்து குறித்தும் கொள்வதாக எனக்கு முறைப்பாடு கிடைத்த்துள்ளது. மக்களுக்கு திருப்திகரமான சேவையாற்ற முடியாவிட்டால் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்படுவார்கள். அரச சேவையானது மக்களுக்கான ஒரு சேவையாகும் அதனை விளங்கிக் கொள்ள வேண்டும் . மக்களிடம் கண்டிப்பாக நடக்க வேண்டாம் என அரச சேவையாளர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். அத்துடன் மக்கள் என்னை எந்த நேரத்திலும் சந்தித்து தங்களது பிரச்சினைகள் தொடர்பாக கதைக்கலாம்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’