வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 3 அக்டோபர், 2011

அரசுடனான பேச்சில் தீர்வு எட்டாவிடின் பாராளுமன்ற தெரிவுக்குகுழுவை புறக்கணிப்போம்: சுரேஷ்

ரசுடனான பேச்சுவார்த்தையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பாராளுமன்ற தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கும். ஆனால் இதுவரையில் அரச தரப்பிடமிருந்து ஆக்கபூர்வமான பதில்கள் எதுவும் இல்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில், தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுக் காணும் நோக்கில் கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது பேச்சுவார்த்தைகள் ஓரளவு ஸ்தம்பித்த நிலையில் தெரிவுக் குழு தொடர்பாக அரச தரப்புகளால் வலியுறத்தப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும் பேசசுவார்த்தைகளில் ஏற்பட்டக்கூடிய இண்ககப்பாட்டின் அடிப்படையிலேயே பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பாக யோசிப்போம். இதுவரையில் முன்னெடுக்கப்பட்டு வந்த தீர்வுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் காரணிகளும் கோரிக்கைகைளும் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவால் உள்ளடக்கப்பட்டால் கலந்துக் கொள்வது தொடர்பில் தீர்மானிக்கலாம். அவ்வாறு இல்லாமல் மீண்டும் முதலில் இருந்து பேச்சை ஆரம்பித்து இழுபறி நிலை ஏற்படுத்தி முயற்சித்தால் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவையே எடுக்கும். தமிழ் மக்கள் அசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக் காணப்பட வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியுடன் செயற்படும். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’