வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 அக்டோபர், 2011

இங்கிலாந்திலிருந்து வந்த பெண்ணை பாலியல் தொந்தரவுக்குட்படுத்த முயன்ற நபர் 5 லட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதிப்பு

ங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் ரீதியில் தொந்தரவுக்குட்படுத்த முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஒருவரை ஐந்து லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று அனுமதியளித்தார்.
இச்சந்தேக நபர், கொழும்பு கோட்டையிலுள்ள டெலிகொம் கட்டிடத்திற்கு அருகில் இருந்த இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் ஒருவரால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்த அறிக்கையில் இங்கிலாந்தைச் சேர்ந்த அப்பெண் செப்டெம்பர் 28 ஆம் திகதி சுற்றுலாப் பயணியாக இலங்கைக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். முறைப்பாட்டு அறிக்கையில்படி, புறக்கோட்டை பிரதான வீதியில் கடையொன்றுக்குச் சென்ற இப்பெண்ணிடம் இலங்கையர்கள் மோசமானவர்கள் எனவும் இலங்கையர்களை நம்ப வேண்டாம் எனவும் சந்தேக நபர் தெரிவித்தார். அப்பெண் சந்தேக நபரை புறக்கணித்தபோது அப்பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார். அப்பெண் கடையிலிருந்து வெளியே வந்தபோது, பின்தொடர்ந்து சென்ற சந்தேக நபர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் எனவும் அப்பெண்ணின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டுமெனவும் தெரிவித்தாராம். அதன்பின் சந்தேநபர் முச்சக்கர வாகனமொன்றில் அப்பெண்ணை பலவந்தமாக ஏற்ற முயன்றபோது அப்பெண்அழுததால் அயலில் இருந்தவர்கள் திரண்டனர். அப்போது இராணுவ புலனாய்வு உத்தியோகஸ்தர் ஒருவர் இருவரையும் பொலிஸ் ஆட்டுப்பட்டித்தெருபொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்குரிய புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக புகாரிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட்டபோது சந்தேக நபரை 5 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப்பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் விசாரணையை ஒக்டோபர் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’