வி டுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் நாட்டுக்குள்ளேயும் வெளிநாடுகளிலும் புலிகள் இயக்கத்துக்குச் சார்ப்பானவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை முடக்கி, நாட்டுக்குள் மீண்டும் பயங்கரவாதம் தோற்றுவிக்கப்படாமல் தடுப்பதற்காக இராணுவத்துக்குள் புதிதாக ஐந்து புலனாய்வுப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
யுத்தத்தின் போது வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்களினூடாக அவ்வியக்கத்தை மேலும் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் ஏற்படுத்தப்பட்ட சமாதானம் சீர்குலைக்கப்படாமல் பாதுகாத்து புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை முடக்கும் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். 40.6 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட படைத் தலைமையகம், இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கிளிநொச்சி படைத்தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, முல்லைத்தீவு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பீ.மார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’