வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 24 அக்டோபர், 2011

தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன்": சயீப் அல் இஸ்லாம் ஆவேசம் _


லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகனான சயீப் அல் இஸ்லாம் தனது தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் என சபதமிட்டுள்ளார்.
சிரிய நாட்டு தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் தோன்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். லிபியாவை விடுவிப்பதற்காக சிர்தே நகரில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலில் கடாபி மோசமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி, மகள் உட்பட சிலர் அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றனர். அவரது மகன் முட்டாசிம் கடாபியுடன் கொல்லப்பட்டார். மற்றொரு மகன் சயீப் அல்- இஸ்லாம் மோதலில் இருந்து தப்பிய நிலையிலேயே இவ்வாறான செய்தியை வெளியிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்து பேசிய அவர்:- நான் சாகவில்லை, இன்னும் உயிருடன் சுதந்திரமாக இருக்கிறேன். லிபிய மக்களுக்காக நான் இறுதிவரை போராடுவேன். என் தந்தையைக் கொன்றவர்களை எதிர்த்து போராடி பழிவாங்குவேன். அதுவரை எனது போராட்டம் ஓயாது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். இதேவேளை கடாபி கொல்லப்பட்ட இறுதிக் கட்ட மோதல் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’