வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 அக்டோபர், 2011

அரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கக்கோரி போராட்டம் நடத்த ஐ.தே.க தீர்மானம்


ரசியல் அமைப்பின் 18ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்கக் கோரியும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்கக் கோரியும் போராட்டம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.க அமைப்பாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் உட்பட பலரை இன்று சந்தித்த பின்னர் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 18 ஆவது திருத்தச்சட்டத்திற்கான அரங்கேற்றத்தின் காரணமாக இலங்கையில் 'சட்டத்தின் ஆட்சி" என்ற அம்சம் வீழ்ந்துள்ளதாக தேர்தல் தினத்தன்று படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர ஒரு வருடத்திற்கு முன்னர் தெரிவித் திருந்தார். பாரத லக்ஷ்மன் கொலையினை இத் திருத்தச் சட்டத்தின் விளைவாக கருதமுடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனாலேயே நாட்டின் சட்ட ஒழுங்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பொலிஸ் நிறுவனமும் தனது சுயாதீன தன்மையை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதன் மேலதிக விளைவே கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தின் போது, இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் தொம்பே சம்பவம் ஆகியனவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’