வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

இந்தியா நேபாள எல்லைப் பகுதியியில் பூகம்பம்

ந்தியாவின் வட கிழக்கு மாநிலமான சிக்கிம்மை ரிக்டர் மானியில் 6.8 புள்ளிகள் வலுவுள்ள பூகம்பம் ஒன்று தாக்கியிருக்கிறது.
இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட நில அதிர்வுகள் நேபாளத்தில் பல இடங்களிலும், வங்கதேசத்திலும், பிற இந்திய மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளன. இந்தியா நேபாள எல்லைப் பகுதியியில் உள்ள மலைகளில் இந்த பூகம்பத்தின் மையம் அமைந்திருந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் சொல்கின்றன. ஆட்சேதம் பொருட்சேதம் பற்றிய விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலும், வங்கதேசத் தலைநகர் தாக்காவிலும் நில அதிர்வுகளால் மக்கள் பீதியடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’