குயாழ். டாநாட்டில் தொடரும் காணாமல் போதல்களின் பின்னணி பற்றிய குழப்பம் தொடர்கின்றது. காணாமல் போன இளைஞர், யுவதிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணமேயுள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் இந்து மதகுரு ஒருவரும், யுவதிகள் இருவரும் காணாமல் போயிருந்தமை தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மறுபுறத்தே நல்லூர் ஆலய உற்சவ காலப் பகுதியான கடந்த மாதம் 20 ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமியொருத்தி, இரு வாரங்களின் பின்னர் அநாதரவாக மீட்கப்பட்டுமுள்ளார். ஆனால் தன்னைக் கடத்திச் சென்றவர்கள் பற்றி விபரிக்க முடியாத நிலையில் அவருள்ளார்.
இறுதியாக கடந்த புதன்கிழமை கைதடிப்பகுதியில் மனோகரன் வின்சிபா (21) எனும் யுவதி காணாமல் போயுள்ளார். தனது தாயாருடன் யாழ் நகரப் பகுதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவர் காணாமல் போயுள்ளார்.
அதேபோன்றே அண்மை நாட்களில் யாழ். நகரிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கென புறப்பட்டுச் சென்றிருந்த இரு மாணவிகள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் மானிப்பாய் மற்றும் நாச்சிமார் கோவிலடி பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இதேவேளை கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போன இந்து மதகுரு, நல்லூர் கந்தசாமி கோவிலில் உதவி பூசகராக பணி யாற்றியுள்ளார். இவர் யாழ்.நகருக்கு சென்ற நிலையிலேயே காணாமல்போயுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’