க. பொ.த. உயர்தர பரீட்சை நிலையங்களில் ஒன்றான மாத்தறை, அக்குரஸ்ஸ தெலிஜவில ரோயல் கல்லூரியின் கட்டிடமொன்றில் 10 வயது மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் அந்நடவடிக்கைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை செப்டெம்பர் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை மேலதிக நீதவான் துலானி அமரசிங்க உத்தரவிட்டார்.
இச் சந்தேக நபர்கள் ஐவரும் மது அருந்தியிருந்ததாக அக்குரஸ்ஸ வைத்தியசாலை மருத்துவர் சமர்ப்பித்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதவானிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப்படை முன்னாள் வீரரான, கிரின்கொட கமகே புத்திக நுவன் குமார (30), பரீட்சை மேற்பார்வையாளர் பந்துல ஹோவாபத்திரண, பாடசாலையின் காவலாளியான இந்திக சுரங்க, அக்குரஸ்ஸ பொலிஸ் சார்ஜனான ஹல்லல்ல வெளிபிட்டிய சரத் ஹோவத்பதிரண, கான்ஸ்டபிள் கிரின்கொட கமகே பிரதீப் குமார (இவர் மேற்படி முன்னாள் விமானப்படை வீரரின் சகோதரர்) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் நான்கு சந்தேக நபர்கள் ஒரு லட்சம் ரூபா பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
மற்றொரு பாடசாலையின் அதிபரான வடுகே தர்மதிலக்க, பரீட்சை இணைப்பாளர் ரஞ்சித் குமார வெத்தசிங்க, பரீட்சை மேற்பார்வையாளர் ஏ. சந்திரசிறி மற்றும் அலுவலக உதவியாளர் சந்திரசிறி ஜாதுங்க ஆகிய நால்வருமே பிணையில் செல்ல அனுமதிக்ப்பட்டனர்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை முடிவுற்று மாணவர்கள் வெளியேறிய பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மேற்படி மாணவி, ஆசிரியர் ஒருவரின் அறிவுறுத்தலுக்கிணங்க, தனது தாய் மற்றும் தங்கையுடன் அவ்வேளையில் பாடசாலைக்கு வந்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை பாடசாலை மூன்றாம் தவணைக்காலம் ஆரம்பமாகுவதால் அம்மாணவியின் சகோதரி கல்வி கற்கும் வகுப்பறையை சுத்தம் செய்வதற்காக இவர்கள் வந்திருந்தனர்.
தனது தாய் வகுப்பறையை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அம்மாணவி தனது நண்பியுடன் பாடசாலையின் பின்புறத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள்.
அவ்வேளையில் மதுபோதையிலிருந்து பிரதான சந்தேக நபரான முன்னாள் விமானப்படை வீரர், மேற்படி சிறுமியை வகுப்பறையொன்றுக்கு அழைத்துச்சென்று துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் சுயநினைவிழந்த சிறுமி, பிரதேச வாசிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள். மாத்தறை நகர பாடசாலையொன்றில் 5 ஆம் வகுப்பில் கல்வி கற்றும் மாணவியே இசம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளாள்.
இச்சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் பரீட்சை நிலையத்தை முற்றுகையிட்டு, அங்குமதுபானம் அருந்திக்கொண்டிருந்த பரீட்சை நிலைய மேற்;பார்வையாளரையும் ஏனையோiயும் சுற்றிவளைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொலிஸார் வந்து சந்தேக நபர்களை கைது செய்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’