சு காதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொரளையில் அமைந்துள்ள மருந்தகத்தில் தவறான மருந்து வழங்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தற்போது அமைச்சில் பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். வைத்தியர் எழுதிக்கொடுத்த மருந்துச் சிட்டையை அமைச்சரின் உதவியாளரிடம் கொடுத்து பொரளையில் மருந்து வாங்கிவரச் சொல்லியிருக்கிறார்.
மருந்து குடித்தும் சுகமாகாததால் அதே வைத்தியரை மீண்டும் அவர் நாடியுள்ளார். மருந்துகளைப் பார்த்ததும் வைத்தியர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தவறான மருந்துகள் வழங்கப்பட்டிருந்ததே அதற்கான காரணம்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதன்பிரகாரம் தேசிய மருந்தக அதிகார சபை, தனியார் மருந்தக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’