வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 செப்டம்பர், 2011

பொதுமக்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம்

ராணுவ மற்றும் பொலிஸ் நிலைகளை தாக்கியவர்கள் பயங்கரவாதிகள் எனவும் அவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு ஒழுங்கு விதிகளின் கீழ் கையாளப்படுவர் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ முகாமை தாக்க வந்த சமயம் யாழ்ப்பாணத்தில் 120க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் இராணுவம் - பொலிஸ் இணைந்த முகாமை தாக்கினர். இது பயங்கரவாதச் செயலாகும் என இராணுவப் பேச்சாளரான நிஹால் கப்புவாராச்சி பி.பி.சி. சந்தேஷியாவுக்கு கூறினார். இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதிகளை இராணுவம் தோற்கடித்தது போலவே பிரச்சினை கொடுக்கும் எவருக்கும் எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புச் செயலர், முஸ்லிம் இமாம்களுடன் பேசும்போது கூறினார். பயங்கரவாதிகளை இராணுவம் எவ்வாறு கையாண்டது என உங்கள் மக்களுக்கு ஞாபகப்படுத்துங்கள். இராணுவத்துடன் முசுப்பாத்தி பண்ண முயல வேண்டாம் என கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். யாழ்ப்பாண மக்கள் தமது பிரதேசத்தில் இரவில் பெண்களை தாக்கும் கிறிஸ் பூதம் எனப்படும் இரவு மனிதர்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால் இராணுவப் பேச்சாளர் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் எங்கும் கிறிஸ் பூதமில்லை என கூறியுள்ளார். இரவில் நடமாடும் மனிதர்களால் நாளாந்த வாழ்க்கை குழம்பிப்போயிருப்பதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்ட வழக்கறிஞரான சிதம்பர உடையார் கனகசிங்கம் கூறினார். கிறிஸ் மனிதன் என சந்தேகிக்கப்பட்ட ஒருவரை கோண்டாவிலில் மக்கள் பிடித்து வியாழக்கிழமை இரவு பொலிஸில் ஒப்படைத்தனர். தாக்க வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட மக்களை பயமுறுத்துவதிலேயே இராணுவமும் பொலிஸுசும் அக்கறையாக உள்ளதாக அவர் கூறினார். ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைதுசெய்ய முன்னரோ அல்லது பின்னரோ தாக்கியதாக கூறப்படுவதில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் கூறினார். ஆயினும் பெயர் கூறவிரும்பாத, இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர், கொழும்பில் பி.பி.சியைச் சேர்ந்த சாள்ஸ் ஹபிலன்டிடம் பேசும்போது பாதுகாப்புணர்வோடு செயற்பட்ட மக்கள் கூட்டத்தின் மீது இராணுவம் உடல் ரீதியான பலப்பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறியுள்ளார். கிறிஸ் பூதம் தாக்கும் வேளையில் மின்சாரம் துண்டிக்கப்படும் அளவுக்கு இது வளர்ந்துள்ளது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டதரணி கனகசிங்கம் கூறினார். இராணுவம் மீதான தாக்குதலின் பின்னால் முன்னாள் தமிழ் புலிகள் இருப்பதாக இராணுவ மூலங்கள் பி.பி.சி.க்கு தெரிவித்தன. விடுதலைப் புலியாக இருக்க வேண்டும் என்று இல்லை. இராணுவத்தை தாக்கும் எவருமே பயங்கரவாதிகள் தான் என பிரிகேடியர் ஹப்புவாராய்ச்சி கூறினார். இதேவேளை பெண்கள் உரிமை ஆர்வலர்கள் குழுவொன்று மீது தாக்குதல் மேற்கொள்வோரிடமிருந்து பெண்களை பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி உயர்நீதிமன்றம் மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக 'சண்டேரைம்ஸ்' செய்தி வெளியட்டுள்ளது. பாதிக்கப்படுவோரை பாதுகாப்பதில் பொலிஸாரும் சட்டவமுலாக்கல் அதிகாரபீடங்களும் தவறிவிட்டதாகக் கண்டித்து இப்பத்திரிகை ஆசிரிய தலையங்கத்தையும் வெளியிட்டது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’