இலங்கையில் யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் அரச படைகளிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் என்று கூறப்படும் விடுதலைப் புலி உறுப்பினர்களில் 525 பேர் நாட்டின் தெற்குப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.
இம்மாதம் 19 திகதி விடுதலை செய்யப்படவுள்ள இந்த முன்னாள் போராளிகள் சிலரிடம், புனர்வாழ்வுக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகளின் தொலைபேசியூடாக தமிழோசை தொடர்பு கொண்டு விபரம் கேட்டது. சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்திய பின் விடுதலை செய்வதாக அரசு கூறுகிறது. இவ்வாறு சரணடைந்தவர்களில் தடுத்துவைக்கப்பட்ட 11, 699 முன்னாள் போராளிகளில் இதுவரை 9,000 பேர் வரை கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எஞ்சியுள்ள சுமார் 3000 பேரில், நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சில நூற்றுக் கணக்கானவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுவார்கள் என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட் ஆலோசகர் எம்.எஸ் சதீஸ்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொண்டிருக்கின்றது. போரின் இறுதி்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய ஐநா நிபுணர் அறிக்கை வெளியானதன் பின்னர், ஜெனிவாவில் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ள ஐநாவின் மனித உரிமைகள் கவுண்சில் கூட்டத்தில் இலங்கை விவகாரம் பேசப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’