வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 செப்டம்பர், 2011

'சிறார் காப்பகங்களில் துஷ்பிரயோகங்கள்'

லங்கையில் காப்பகங்களில் இருக்கும் சிறார்கள் பெருமளவில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதாகவும் அதனால் காப்பகங்களை மூடி விட்டு சிறார்களை குடும்பங்களிடம் பொறுப்பு கொடுத்து குடும்ப சூழலில் அவர்கள் வளர உதவ வேண்டும் என்று இலங்கை சிறார் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள 90 சிறார்களும் கிளிநொச்சியில் உள்ள 50 சிறார்களும் இதுபோல குடும்பங்களின் பராமரிப்புக்காக கொடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, குழந்தைகள் சிறப்பான முறையில் வளர குடும்ப சூழல் இன்றியமையாதது என்ற கருத்தாக்கம் பலரிடம் இருந்தாலும் சிறார் காப்பகங்களை மூடுவது என்பது நடைமுறை சாத்தியமான விடயமாக இருக்காது என்று ஆதரவற்ற சிறார்களை பராமரித்து வரும் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும் கோகுலம் சிறார் காப்பகத்தின் பொறுப்பாளர் நந்தராணி தேவி அவர்கள் இது பற்றி தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், தமது காப்பகத்தில் உள்ள 125 குழந்தைகளையும் தான் தினந்தோரும் சந்திப்பதாகவும் தமது நேரடி கண்காணிப்பில் சிறார்களை வைத்திருப்பதன் மூலம் சிறார்களை பாதுகாப்பாக பராமரிக்கக் கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உறவினர்களின் பொறுப்பில் விடப்படும் குழந்தைகளும், குழந்தையில்லாத தம்பதியினர் தத்தெடுக்கும் குழந்தைகளும் கூட துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும் கோகுலம் சிறார் காப்பகத்தின் பொறுப்பாளர் நந்தராணி தேவி தமிழோசையிடம் தெரிவித்தார். இலங்கையில் சுமார் 20 ஆயிரம் சிறார்கள் 470 காப்பகங்களில் வளர்ந்து வருவதாக சிறார் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. இதில் வெறும் 22 காப்பகங்கள் மட்டுமே அரசால் நடத்தப்படுகின்றன. மீதியுள்ளவை தனியாராலும், மதச் சார்பு அமைப்புக்களாலும் நடத்தப்படுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’