கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலும் யாழ். சிறையில் தடுத்து வைக்கப் பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது நேற்றுமாலை ஐந்து மணியளவில் பெரும்பான்மையின கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் மூவர் படுகாயமடைந்ததுடன் ஏனைய கைதிகள் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ரெலோ அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த நபரொருவருடன் ஏற்பட்ட முறுகல் நிலையைடுத்து தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக இந்த முறுகல் நிலை காணப்பட்டதாகவும் இதனையடுத்து குறிப்பிட்ட பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த அந்த நபர் வேறு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாகவும் இதனையடுத்து தமிழ்க் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலையடுத்து தமிழ்க் கைதிகள் அனைவரும் ஈ மற்றும் ஐ பிரிவுகளில் தனியாக பிரித்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இன்று தாம் திறந்துவிடப்படும் போது தம்மீதான தாக்குதல்கள் தொடரலாம் என்று தமிழ் அரசியல் கைதிகள் அச்சமடைந்துள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் மீது சிறைக் காவலர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’