யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் கிறீஸ் மர்மமனிதர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பொற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த ஆராய்ந்தறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மாவட்டத்தின் பொலிஸ் இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட முக்கிய உயர்மட்ட மாநாடு இன்றைய தினம் நடைபெற்றது. இதன்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக் காலமாக நிலவிவரும் கிறீஸ் மனிதர் விவகாரம் தொடர்பாக மக்கள் மத்தியிலுள்ள கருத்துக்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தறியப்பட்டன. குறிப்பாக மர்ம மனிதர்களுக்கும் படைத்தரப்பினருக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகவும் படைத்தரப்பினர் அவர்களுக்கு உதவி வருவதாகவும் மக்கள் தரப்பு பிரதிநிதிகள் சுட்டிக் காட்டினர். கருத்துக்களை மக்கள் பிரதிநிதிகள் மட்டுமன்றி மதத் தலைவர்கள் மதகுருமார்கள் சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டோரும் எடுத்துரைத்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதி வாழ்க்கைக்கும் உடனடியாக வழிவகை ஏற்படுத்த வேண்மெனவும் கோரிக்கை விடுத்திருந்தனர். அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமை உரையாற்றும் போது அண்மைக்காலமாக இம்மாவட்டத்தில் மக்கள் மத்தயில் ஏற்பட்டுள்ள மர்மமனிதர் தொடர்பான பதற்ற நிலைமை காரணமாக இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் முகமாக இவ்வுயர்மட்ட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டள்ளதாகவும் இதற்காக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் யாழ் மாவட்ட நிலைமை தொடர்பாக அடிக்கடி என்னுடன் ஜனாதிபதி அவர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து வருவதாகவும் அதன் பொருட்டு மக்களின் அமைதி வாழ்வுக்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் சுட்டிக் காட்டினார். அத்துடன் வதந்திகளுக்கு எடுபடாமலும் வதந்திகளைப் பரப்பாமலும் மக்கள் இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அங்கு யாழ் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கருத்துத் தெரிவிக்கும் போது இன்றைய கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் பெற்றுக் கொள்ளப்பட்ட சமாதானத்தை குழப்புவதற்காக விசமிகள் சிலரால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்ற ஒரு திட்டமிட்ட நடவடிக்கையே இந்த கிறீஸ் மர்ம மனிதர் விவகாரம் என்றும் இது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் 2009ம் ஆண்டு மே 19 பின்னர் இதுவரையில் படைத்தரப்பினர் துப்பாக்கி பாவனையை நிறுத்தி வைத்துள்ள நிலையில் இந்த அமைதிச் சூழலை குழப்பும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக இவ்வாறான செயல்களை தடுக்க முடியுமெனவும் சுட்டிக் காட்டினார். அத்துடன் இந்த மக்களின் நலன்களிலும் அபிவிருத்தி நடவடிக்கைளிலும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அதனால் இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி இன்றைய தினம் தன்னை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இதன் பிரகாரம் வடமாகாண ஆளுநர் தலைமையில் சமூக மட்ட மற்றும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிறப்பு செயற்குழுவொன்று இயக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் உதயன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மாவட்டத்ததின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மதகுருமார்கள் கல்வியாளர்கள் நலன்விரும்பிகள் எனப் பலதரப்பட்டோரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’